நபிமார்களானாலும் அல்லாஹ்விற்கு நிகராக முடியாது
நபிமார்கள் அனைவரும் இறை நேசர்கள் என்பது உறுதியான விஷயமாகும். அப்படிப்பட்ட இறைத் தூதர்களை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்கிவிடக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் இறைத் தகுதியை எட்டாத மனிதர்களை அல்லாஹ்விற்கு இணையாக்குவது எவ்வளவு மோசமான செயல்?
எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை, மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகிவிடுங்கள்” (என்றே கூறினர்)
‘வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்” என்று அவர் உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக ஆன பின் (ஏக இறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?
அல்குர்ஆன் 3:79, 80
நபிமார்கள் உட்பட எவரும் அடிமை என்ற தகுதியைத் தாண்டி இறைவனின் தன்மைகளை ஒரு போதும் அடைய முடியாது.
வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
அல்குர்ஆன் 19 – 93
No comments:
Post a Comment