பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, November 4, 2019

தாம்பத்திய உறவு

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....தொடர் 1⃣3⃣0⃣*


*☄ திருமணத்தின்*
                 *ஒழுங்குகள் [ 21 ] ☄*

                *🏖 இறுதி பாகம் 🏖*

      *☄ தாம்பத்திய உறவு ☄*

*🏮🍂தாம்பத்திய உறவு கொள்வதற்கு என்று ஏராளமான கட்டுக் கதைகளை முஸ்லிம்கள் உண்டாக்கி அதை நம்பி வருகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.*

 🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄ மாதவிடாயின் போது ☄*

*🏮🍂மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது.*

_*🍃மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளை யிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான் எனக் கூறுவீராக!*_

*📖 (திருக்குர்ஆன் 2:222) 📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙 

*☄மலப்பாதையில் உறவு கொள்வதும் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.☄*

_*🍃தனது மனைவியில் மலப்பாதையில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*📚 நூல்: அபூதாவூத் 1847 📚*

*🏮🍂இதைத் தவிர தாம்பத்திய உறவில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. குறிப்பிட்ட நாட்களில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் உறவு கொள்ளக் கூடாது என்று அலீ (ரலி) அவர்களின் பெயரால் கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதையாகும்.*

*🏮🍂குறிப்பிட்ட முறையில் தான் உறவு கொள்ள வேண்டும். ஒருவரது அந்தரங்கத்தை மற்றவர் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படும் அனைத்தும் கற்பனை செய்யப்பட்ட பொய்களாகும்.*

*🏮🍂அல்லாஹ் எதையும் மறைப்பவன் இல்லை. மறப்பவனும் அல்ல. தாம்பத்தியத்தில் தடுக்கப்பட வேண்டியவை ஏதும் இருந்தால் அதை அவனே கூறியிருப்பான்.*

*🏮🍂மேற்கண்ட போதனைகளைத் தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். வல்ல இறைவன் இஸ்லாத்தின் இந்தப் போதனைகளைச் செயல்படுத்தி வெற்றியடையக் கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக.*

 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
        அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment