பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

அல்லாஹ்வின் தூதரே ‎- ‏3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

*🏅அல்லாஹ்வின் தூதரே 🏅*
                                  ⤵️
           *📚அழகிய ஆசிரியர்📚*

             *✍🏻.... தொடர் :  [ 03 ]*

*☄️இரத்தின சுருக்கமாக*
             *போதித்த ஆசிரியர்*

*🏮🍂நீண்ட நெடிய கருத்துக்களை ஓரிரு வார்த்தைகளில் விளக்கும் திறமை நபிகளாருக்கு இருந்தது. பக்கம் பக்கமாக விவரிக்க வேண்டிய விசயங்களைக் கூட இரத்தின சுருக்கமாக தெளிவுபடுத்தி விடுவார்கள்.* எல்லாவற்றுக்கும் மேலாக, கற்றுத் தருவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

*انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ رَجُلٌ غَرِيبٌ، جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ، لَا يَدْرِي مَا دِينُهُ، قَالَ: فَأَقْبَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَيَّ، فَأُتِيَ بِكُرْسِيٍّ، حَسِبْتُ قَوَائِمَهُ حَدِيدًا، قَالَ: فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللهُ، ثُمَّ أَتَى خُطْبَتَهُ، فَأَتَمَّ آخِرَهَا*

_*🍃நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். நான் “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்காரர் தமது மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்” என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, என்னை நோக்கி வந்துசேர்ந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது.*_

_அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று நான் எண்ணுகிறேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்து, அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது உரையை முழுமையாக்கினார்கள்._

*🎙️அறிவிப்பவர்:*
           *தமீம் பின் அசத் (ரலி)*

       *📚நூல்: முஸ்லிம் (1590)📚*

*🏮🍂அதிகமாக அறிந்திருக்கிறோம் என்பதை விடவும் அடிப்படையான விசயங்களை முதலில் அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு அறிய வந்தவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்தார்கள். கற்றுக் கொள்ள நாடுவோருக்கு தகுந்த ஏற்பாட்டினை வாய்ப்பை தருவது நபியின் வழக்கம்.* இதற்கு பின்வரும் சம்பவமும் சான்றாக உள்ளது.

*قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ*

_*🍃‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
           *அபூஸயீதுல் குத்ரி (ரலி)*

       *📚நூல்: புகாரி (101)📚*

*🏮🍂கல்விப் பணியில் இருப்போர் கற்றுத் தருவதில் ஆர்வம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவரது அறிவாற்றல் மூலம் அடுத்தவர்களுக்கு பயன் கிட்டும். இல்லாவிட்டால், கொத்துக் கொத்தாக பூத்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றுதான் அவரது நிலை இருக்கும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment