பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

மறுமை வெற்றிக்காக - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

       *🌺 மறுமை வெற்றிக்காக*
                                   ⤵️
             என்ன செய்திறுக்கிறோம்

                 *✍🏻....தொடர் : [ 10 ]*

*🌺நற்காரியங்களில்*
         *நிலைத்திருப்போம்🌺*

*🏮🍂நேற்று தானே செய்தோம் என்றோ அல்லது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றோ எண்ணிக் கொண்டு எந்த நற்செயலையும் தள்ளிப்போடாமல், இயன்ற வரை அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.* இதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் பிடிக்கும். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் சொல்வதைப் பார்ப்போம்.

وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، *عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ تَعَالَى أَدْوَمُهَا، وَإِنْ قَلَّ»*

_*🍃நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *ஆயிஷா (ரலி)*

     *📚நூல்: முஸ்லிம் (1436)📚*

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، *عَنْ عَلْقَمَةَ قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْتَصُّ مِنَ الأَيَّامِ شَيْئًا؟ قَالَتْ: ” لاَ، كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطِيقُ*

_*🍃‘நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா❓’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன்._ _*அதற்கவர்கள் ‘இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்❓’ என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
                   *அல்கமா(ரஹ்)*

      *📚நூல்: புகாரி (1987)📚*

*🏮🍂நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் சிறப்பை எடுத்துக் கூறிய நபியவர்கள், அதற்கு முன்மாதியாகவும் திகழ்ந்தார்கள். அவ்வாறு நாமும் நமது செயல்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment