பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, February 17, 2021

அல்லாஹ்வின் தூதரே - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

*🏅அல்லாஹ்வின் தூதரே 🏅*
                                  ⤵️
           *📚அழகிய ஆசிரியர்📚*

             *✍🏻.... தொடர் :  [ 02 ]*

*☄️எளிதாக்கிச்*
             *சொல்லிய  ஆசிரியர்*

*إِنَّ اللهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا، وَلَا مُتَعَنِّتًا، وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا*

_*🍃…அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *ஜாபிர் (ரலி)*

     *📚நூல்: முஸ்லிம் (2946)📚*

*🏮🍂மார்க்கம் சொல்வதற்கு வந்திருப்பதாகக் கூறாமால், அதை எளிமையாக சொல்வதற்கு வந்திருப்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். இங்கு தமது கற்பிக்கும் தன்மையையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள்.*

*🏮🍂அதற்கேற்ப, குறைவான சொற்களில் நிறைவான பொருள் கொள்ளும் வகையில் பேசும் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தந்திருந்தான்.*

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ: *أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ «بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ فَوُضِعَتْ فِي يَدِي*

_*🍃நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் (ஜவாமிஉல் கலிம்) வழங்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன என்று  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி)*

      *📚நூல்: புகாரி (7013)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment