பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள் - 7

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 07 ]*

*☄️சொர்க்கவாசிகள் மூவர்*

*🏮🍂ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம் காண்கிறோம். நபிகள்ஹநாயகம் ஸல் அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் பண்புகள் யாவை என்பதை விலாவரியாக விளக்கிக் கூறியுள்ளார்கள்.* பின்வரும் செய்தியில் சொர்க்கம் செல்லும் மூன்று நபர்களை பற்றி விளக்கி இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி என்பதை வலியுறுத்துகிறார்கள்.

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:_

_*🍃மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர்.ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர்.*_

_*🍃இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர்.*_

_*🍃 மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.*_

*🎙️அறிவிப்பவர்*
              *இயாள் பின்*
                         *ஹிமார் (ரலி),*

          *📚 முஸ்லிம் 5498 📚*

_(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️அல்லாஹ்*
              *ரசூலுக்குக்*
                       *கட்டுப்படுதல்☄️*

*🏮🍂அல்லாஹ் ரசூலுக்குக் கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான். சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும் குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.*

_இதை பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன._

_*🍃அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.*_

*📖அல்குர்ஆன் 48:17📖*

_*🍃இவை அல்லாஹ்வின் வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.*_

     *📖அல்குர்ஆன் 4:13📖*

_*🍃(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் தூதரே!ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.*_

*🎙️ அறிவிப்பவர்:*
                *அபூஹூரைரா (ரலி),*
           
             *📚 புகாரி 7280 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment