பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 29, 2020

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                             *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 01 ]*

           *☄️முன்னுரை☄️*

*🏮🍂மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை.* சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு *அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.* எனவே சொர்க்கம் பற்றிய குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் முக்கிய தகவல்களை சுருக்கமாக இந்த தொடரில் பார்க்க இருக்கிறோம்!

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

                 *☄️ தகுதி ☄️*

*🏮🍂சொர்க்கத்தில் நுழைய யார் தகுதி பெறுவார்கள் என்பதை குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு தகுதிகளை அது குறிப்பிடுகிறது. முதலாவதாக இணை வைப்பு இல்லாத, நல்லறங்களுடன் கூடிய இறைநம்பிக்கை கொண்டவரே சொர்க்கம் செல்ல தகுதியானவர்* என்பதைப் பல வசனங்களில் இறைவன் அழுத்தமாகக் கூறியுள்ளான்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️இணைவைப்பு இல்லா*
           *இறைநம்பிக்கை*

*🏮🍂அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத ஏகத்துவவாதிகள் மட்டுமே சொர்க்கம் செல்லத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டாரோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நம்ப மறுத்து விட்டாரோ அவர் சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறார்.*

_குர்ஆன் சொர்க்கவாசிகளைப் பற்றி பேசும் அநேக இடங்களில் நல்லறங்களைப் புரியும் முஃமின்களே சொர்க்கத்திற்குத் தகுதியானவர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது._

_🏮🍂இணை கற்பிக்காதவரே குர்ஆன் கூறும் முஃமின்கள் பட்டியலில் இடம் பெறுவார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை._

*وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا هَٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَهُمْ فِيهَا خَالِدُونَ*

_*🍃“நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராக!அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது” எனக் கூறுவார்கள்.ஹஇதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.*_

   *📖அல்குர்ஆன் 2 25📖*

*وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ لَّهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ۖ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا*

_*🍃நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம்.ஹஅவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.*_

     *📖அல்குர்ஆன் 4:57📖*

*وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ*

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள்.அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.*_

       *📖அல்குர்ஆன் 7:42📖*

*وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ ۚ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ*

_*🍃நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது.இதுவே மகத்தான வெற்றி.*_

       *📖அல்குர்ஆன் 9 72📖*

*إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَانِهِمْ ۖ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ*

_*🍃நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக இன்பம்ஹநிறைந்த சொர்க்கச் சோலைகளில் அவர்களின் இறைவன் அவர்களைச் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.*_

     *📖அல்குர்ஆன் 10:9📖*

_*🍃நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.*_

*📖 அல்குர்ஆன் 20:75,76📖*

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، *عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَهُ وَأَوْسَ بْنَ الْحَدَثَانِ أَيَّامَ التَّشْرِيقِ فَنَادَى ‏ ‏ أَنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ مُؤْمِنٌ ‏.‏ وَأَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏"*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்களில் அனுப்பி, “இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்; “மினா’வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
            *கஅப் பின்*
                       *மாலிக் (ரலி),*

*📚 நூல் : முஸ்லிம் 2100 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment