Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, December 9, 2019

இஸ்லாத்தை அறிந்து - 63

*🍓🍓🍓மீள் பதிவுக்ஷ🍓🍓🍓* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 63 👈👈👈* 


     *👉தலைப்பு👇*



*🕋🌐🔰⛱ஜும்மா பற்றிய கூடுதல் விளக்கம்🕋🌎🔵🌈* 


*🕌  வெள்ளிக்கிழமையை🕋*

*🚿மறந்து விட*
          *வேண்டாம் !🚿*

*🚿மறந்து விட*
          *வேண்டாம்* !!🚿

*🚿மறந்து விட*
          *வேண்டாம் !!!🚿*


                        👇🏿
 *💥ஒட்டகம் ➡🐪👈🕋*

                          👇🏿
*💥மாடு        ➡🐄👈🕋*

                         👇🏿
*💥ஆடு         ➡🐏👈🕋*

                          👇🏿
*💥கோழி     ➡🐓👈🕋*

                         👇🏿
*💥முட்டை   ➡⚪👈🕋*

*🌸ஆகியவற்றை செலவில்லாமல்  குர்பானி கொடுத்த நன்மை பெற வேண்டிய நாள்.🌸*

*🌻இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 🌻*

*🌻"நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."🌻*

        *அல்குர்ஆன்:62:09*


*🌻" இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.”  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். "🌺*

  *ஷஹீஹ் புகாரி:881*


*🌻"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போ0து, உன் அருகில் இருப்பவரிடம் நீ ”மௌனமாக இரு” என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "🌺*

*ஸஹீஹ் முஸ்லிம்:1541*

 
*🚗விரைந்து செல்லுங்கள் நன்மைகளை அள்ளிக்கொள்ள...🌺🌺🌺*


*📚📚📚ஜும்ஆ தொழுகையின் முன் பின் சுன்னத்துகள் எத்தனை❓❓❓📚📚📚*

 *👉 👉 👉 ஆதாரப்பூர்வமான நபிமொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு 👇👇👇👇👇* 


 *✍✍✍என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுது நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.* 
 *ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ஜும்ஆ உடைய பர்ளுக்கு பின்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்* .
 *ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இன்னாரே! தொழுது விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.✍✍✍* 


 *(நூல்: புஹாரி 930)* 


    *👆👆👆இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை சொல்கிறது.👈👈👈* 


    *📕📕📕தொழாதவர் ஜும்ஆ உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும் என்பது முதல் விஷயம்.* 
    *உரைக்கும் முன் தொழுது விட்டிருந்தால் தொழாமல் அமர்ந்து கொள்ளலாம் என்பது இரண்டாவது விஷயம்.* 
    *அதாவது உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சுன்னத் இரண்டு ரக்அத்துக்களை முன்னரே தொழுது விட்டிருந்தால் நேரடியாக சென்று அமர்ந்து கொள்ளலாம்* .
 *இக்கருத்தை இப்னுமாஜாவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸ் கூடுதல் விபரங்களோடு விளக்குகிறது.* 
    *நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்று கேட்க, அவர் 'இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக' என்றார்கள்📕📕📕* 


*என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)* 


    ' *✍✍✍நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?' என்ற வாசகம் பள்ளியல்லாத மற்ற இடங்களிலும் தொழும் தொழுகையை குறிப்பதை கவனிக்கலாம்.* 
    *இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை முக்கியத்துவம் பெறாது. உரையை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும், அதுவே முக்கியத்துவம் பெறும்.* *மற்ற தொழுகைகளுக்கு முன் சுன்னத் பாங்கிற்கு பின்பு தான் தொழ வேண்டும். ஆனால் ஜும்ஆவின் முன் சுன்னத்தின் நேரம் பாங்கிற்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றது.* *அதற்கான ஆதாரம். இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள்.✍✍✍* 

 *(அறிவிப்பவர்: நாஃபிஉ (ரலி), நூல்கள்: அபூதாவூது 1123, இப்னு ஹிப்பான்)* 


 *📘📘📘இரண்டு ரக்அத்துகள் “அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)அறிவித்தார்.* *நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும்* *தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.* *ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.📘📘📘* 


 ( *பார்க்க புகாரீ 937)* 


 *✍✍✍மேற்சுட்டிக்காட்டிய ஹதீஸின் மூலம் ஜும்ஆவுக்கு பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அதே நேரம் பின் வரும் ஹதீஸ் ஜும்ஆவுக்கு பின் நான்கு ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதை காணலாம்.* 
 *நான்கு ரம்அத்துகள் மேலும்“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்* *கூறினார்கள்:உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!*✍✍✍ 


 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1597)* 


 *📙📙📙இரண்டு விதமான ஹதீஸ்கள் வந்துள்ளன. எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொருத்து இரண்டையும் வாழ்க்கையில் நடை முறைப்படுத்தலாம். அவசர பயணங்கள் போக இருந்தால் ஜும்ஆக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம். அல்லது நிதானமாக இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக மொத்தம் நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம்.* 
 *இரண்டு சுன்னத்துகளையும் மாறி, மாறி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திய பாக்கியம் நமக்கு கிடைக்கும்.* 
 *நாங்கள்* *ஷாஃபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழமாட்டோம்,* *இரண்டு ரக்அத்துகள் தான் தொழுவோம் என்று நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்.* 
 *அதே போல நாங்கள்* *ஹனபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் எங்களுக்கு நான்கு ரக்அத்துகள் தான் சுன்னத் தொழ வேண்டும்,* *நாங்கள் இரண்டு ரக்அத்துகள் தொழ மாட்டோம் என்று கூறி* *நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்❓📙📙📙* 

 *✍✍✍மத்ஹபை காரணம் காட்டி ஹதீஸ்களை நிராகரித்து விடாதீர்கள்,* *ஹதீஸூக்கு முக்கியத்துவம், முன்னுரிமையும் கொடுங்கள்.* *சந்தர்ப்பத்திற்கேற்ப இரண்டு சுன்னாக்களையும் நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுங்கள்.* 
 *பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை நமது வீடுகளில் தொழுவது தான் சிறப்பாகும். ஆனால் தொழில் ரீதியாக நாம் அடிக்கடி வெளியே இருப்பதால் பர்ளுடைய முன், பின் சுன்னத்துகளை பள்ளியில் தொழுது கொள்ள வேண்டிய நிலை இருந்தாலும், சுப்ஹுடைய சுன்னத்தை வீட்டில் தொழுது விட்டு பள்ளிக்கு போகலாம். ஏன் என்றால் சுப்ஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி இருபது அல்லது இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது, எனவே தாராளமான நேரம் இருப்பதால் சுப்ஹு நேரதத்தில் பாங்கு கேட்டவுடன் வீட்டிலேயே உளூ செய்து வீட்டு, சுப்ஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகளை வீட்டில் தொழுத பின் உளூவுடன் பள்ளிக்குச் சென்று இகாமத் சொல்ல நேரம் இருக்கும் என்றால் பள்ளி காணிக்கை தொழுகையான தஹ்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துகள் தொழக் கூடிய பழக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.* 
 *அந்த வரிசையில் ஜும்ஆவுக்கப் பின் வீட்டில் போய் தொழக்கூடிய சந்தர்ப்பம் இருந்தால் வீட்டிற்கு சென்று சுன்னத்தை வீட்டில் தொழுலாம். அல்லது பள்ளியிலே தொழுது கொள்ள வேண்டும்* .
 *எனவே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடை துாதர் அவர்களும் எந்த அமல்களை நமக்கு எப்படி காட்டித் தந்துள்ளார்களோ அவைகளை அப்படியே நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுவோமாக✍✍✍* 


 *🌐🌐🌐ஜும்மா குத்பா சம்மந்தமான சில தெளிவுகள்🌐🌐🌐* 


 *📕📕📕இமாம் இரு குத்பாக்களுக்கிடையி அமரும் போது* *முஅத்தின்ஸலவாத்துச் சொல்லுதல் இமாம் முதலாவது உரையை செய்துவிட்டு சற்று* *அமா்வார்.மீண்டும் இரண்டாவது குத்பாவுக்காக** *எழும்புவார்.இவ்வாறு இருகுத்பாக்களுக்கிடையில் இமாம் அமரும் போது* , *அவரை எழுந்து நிற்கச்செய்வதற்காக முஅத்தின் ‘* *அல்லாஹூம்ம ஸல்லிவசல்லிம் வபாரிக்வசல்லிம் அலை’* *என்று ஸலவாத்துச் சொல்லும் நடைமுறை* *பெரும்பாலானபள்ளிகளில்* *இருக்கிறது.இதுவும்* *நபிவழியில் இல்லாத புது வழியாகும்* . *நபிகளார் இவ்வாறு அமரும் போது* *பிலால் (ரலி)* *அவா்கள் ஸலவாத்துச்சொன்னதாக எந்தவொரு செய்தியும் வரவில்லை.எனவே* *இதை செய்வதும்பித்அத்தாகும்📕📕📕* .


 *🌎🌎இரண்டாம் குத்பா கிடைத்தால் தான் ஜும்ஆ நன்மை கிடைக்குமா❓🌎🌎* 


 *✍✍✍இமாம் உரையாற்றுவதற்கு முன் ஜும்ஆத் தொழுகைக்கு வருபவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைப்பதாகப் பின்வரும் செய்தி கூறுகின்றது.✍✍✍* 
 

 *881* حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري


📘📘📘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள்.📘📘📘


 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல் : புகாரி 881* 


 *✍✍✍இமாம் உரையாற்றுவதற்கு முன்பு வந்தவர்களுக்கு குர்பானி கொடுத்த நன்மை கிடைக்கும் என இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.* 
 *இமாம் உரையாற்றிய பின் வருபவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காது. ஆனால் அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டதால் ஜும்ஆத் தொழுபவருக்கு ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள மற்ற சிறப்புகள் அவருக்குக் கிடைக்கும்✍✍✍.* 


📙📙📙அதே நேரத்தில் ஒருவர் இமாம் உரையாற்றுவதற்கு முன்பாகவே வர வேண்டும் என நாடுகிறார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக இது அவருக்குத் தவறிப் போனால் அவர் நல்லதை நாடியதற்காக அதற்குரிய நன்மையை இறைவன் அப்படியே அவருக்குக் கொடுப்பான்.📙📙📙

 

 *3534* حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ بِالْمَدِينَةِ لَرِجَالًا مَا سِرْتُمْ مَسِيرًا وَلَا قَطَعْتُمْ وَادِيًا إِلَّا كَانُوا مَعَكُمْ حَبَسَهُمْ الْمَرَضُ رواه مسلم


 *✍✍✍நாங்கள் ஓரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும் போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது” என்று சொன்னார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)* 

 *நூல் : முஸ்லிம் 3872* 



 *🌐🌐இமாம் உரையாற்றும் போது பேசக்கூடாது🌎🌎* 


 *934* - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ.


📗📗📗“இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📗📗📗

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),* 

 *நூல்: புகாரி 934* 


 *🌎🌎இமாம் உரையாற்றும் போது விளையாடக்கூடாது🌎🌎* 


 *1419* – و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا


 *✍✍✍“யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *அறி: அபூஹுரைரா (ரலி),* 

 *நூல்: முஸ்லிம் 1419* 


 *🕋🕋🕋ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா❓🕋🕋🕋*


📒📒📒இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள்.📒📒📒


 *✍✍✍மார்க்க அறிஞர்களில் சிலர் அவ்வாறு உட்காருவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று கூறி அதற்கு ஆதாரமாக சில செய்திகளையும் முன்வைக்கின்றனர்* .
 *முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக் காலிட்டு அமரும் முறைக்கு அரபியில் இஹ்திபாவு என்றும் அல்ஹப்வா என்றும் குறிப்பிடுவார்கள்.✍✍✍* 


📓📓📓இவ்வாறு அமரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதாக சில செய்திகள் வந்துள்ளன. ஆனால் அந்தச் செய்திகள் அனைத்தும் மிக மிகப் பலவீனமானவையாகவே உள்ளன.
இது தொடர்பான செய்தி முஆத் இப்னு அனஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி), ஜாபிர் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறிவிப்பையும் அது எவ்வாறு பலவீனமானது என்பதையும் காண்போம்.
முஆத் இப்னு அனஸ் (ரலி அறிவிப்பு📓📓📓


 *514* – حدثنا محمد بن حميدالرازي وعباس بن محمد الدوري قالا حدثنا أبو عبد الرحمن المقرئ عن سعيد بن أبي أيوب حدثني أبو مرحوم عن سهل بن معاذ عن أبيه : أن النبي صلى الله عليه و سلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (رواه الترمدي)


 *✍✍✍ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.✍✍✍* 

 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : திர்மிதி (514)* 


 *இந்த அறிவிப்பு அபூதாவூத் (1112), முஸ்னத் அஹ்மத் (15668), இப்னு குஸைமா (1815), தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் (16797), சுனனுல் பைஹகி அல்குப்ரா (5704), முஸ்னத் அபீ யஃலா (1492, 1496) ஹாகிம் (1069), ஷரஹுஸ் சுன்னா (1082) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.* 


📔📔📔இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் என்பார் இடம் பெற்றுள்ளர். இவருடைய அறிவிப்பை இமாம் இப்னு மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.📔📔📔


حدثنا عبد الرحمن انا أبو بكر بن ابى خيثمة فيما كتب إلى قال سمعت يحيى بن معين يقول: سهل بن معاذ بن انس عن ابيه ضعيف. (الجرح والتعديل (4/ 203)


 *✍✍✍ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பை பலவீனமானவை என இமாம் யஹ்யா இப்னு மயீன் விமர்சித்துள்ளார்கள்.✍✍✍* 


 *நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்.203)* 


⛱⛱⛱மேற்கண்ட செய்தியை இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற செய்தியாகும். எனவே இமாம் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் அது பலவீனமானதாகும்.
இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் இவரை விமர்சித்துள்ளார்கள்⛱⛱⛱.


سهل بن معاذ بن أنس ، يروى عن أبيه روى عنه زبان بن فائد منكر الحديث جدا (المجروحين 1/ *347* )


 *✍✍✍ஸஹ்ல் இப்னு முஆத் இப்னு அனஸ் ஹதீஸ் துறையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார்.✍✍✍* 


 *(நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் 1, பக்கம் 347)* 


🌈🌈🌈எனவே ஸஹ்ல் பின் முஆத் இடம் பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானது என்பதில் சந்தேகமில்லை.🌈🌈🌈


 *✍✍✍மேலும் மேற்கண்ட செய்தியில் அபூ மர்ஹும் என்பாரும் இடம் பெற்றுள்ளார். இவருடைய பெயர் அப்துர் ரஹீம் இப்னு மைமூன் என்பதாகும். இவரைப் பற்றி அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்✍✍✍.* 


قال ابن أبي خيثمة عن ابن معين ضعيف الحديث وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به وقال الذهبي فيه لين


🏵🏵🏵இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் விமர்சித்துள்ளார். மேலும் இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அவை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்.🏵🏵🏵


 *(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம் : 2, பக்கம் 354)* 


 *✍✍✍இவர் பலவீனமானவர் என இமாம் தஹபீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.✍✍✍* 


 *(நூல்: அல்காஷிஃப், பாகம்: 1, பக்கம் 650)* 


📚📚📚மேற்கண்ட அறிவிப்பில் ஸஹ்ல் இப்னு முஆத் மற்றும் அபூ மர்ஹும் ஆகிய இரண்டு பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலவீனமான அறிவிப்பு என்று உறுதியாகிவிட்டது.📚📚📚


 *✍✍✍ஸஹ்ல் பின் முஆத் என்பாரிடமிருந்து ஸப்பான் இப்னு ஃபாயித் என்பவர் வழியாகவும் இதே செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.✍✍✍* 


 *16798* – حَدَّثَنَا بَكْرُ بن سَهْلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ زَبَّانَ بن فَايِدٍ، عَنْ سَهْلِ بن مُعَاذِ بن أَنَسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ ..(المعجم الكبير للطبراني 15/ 108)


📕📕📕ஜும்ஆ நாளில் முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📕📕📕


 *அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)* 

 *நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானீ (16798) பாகம் 15, பக்கம் 108* 


 *✍✍✍இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல பலவீனங்கள் உள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இது ஸஹ்ல் இப்னு முஆத் தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்பாகும். எனவே இது பலவீனமானதாகும். இது பற்றிய விபரத்தை முந்திச் சென்ற செய்தியின் விமர்சனத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்* .
 *இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸப்பான் இப்னு ஃபாயித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.✍✍✍* 


قال أحمد أحاديثه مناكير وقال يحيى ضعيف وقال ابن حبان لا يحتج به .( الضعفاء والمتروكين لابن الجوزي 1/ 292)

قال ابن حبان منكر الحديث جدا يتفرد عن سهل بن معاذ بنسخة كأنها موضوعة لا يحتج به وقال الساجي عنده مناكير (تهذيب التهذيب 3/ 265)


📘📘📘இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு மயீன் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்.📘📘📘


 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம் 1, பக்கம் 292* 


 *✍✍✍இவர் ஹதீஸ் துறையில் மிகவும் நிராகரிக்கப்பட வேண்டியவர் ஆவார். இட்டுக்கட்டப்பட்டதைப் போன்று இருக்கும் ஒரு பிரதியை இவர் ஸஹ்ல் இப்னு முஆதிடமிருந்து தனித்து அறிவிக்கின்றார். இவர் ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டார் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவரிடம் மறுக்கத்தக்க செய்திகள் உள்ளன என இமாம் ஸாஜி கூறியுள்ளார்.✍✍✍* 


 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 3, பக்கம் 292)* 


📙📙📙மூன்றாவது பலவீனம்: மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.📙📙📙


 عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف – الضعفاء والمتروكين بن لهيعة ضعيف الحديث- (تاريخ ابن معين) سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه ( تاريخ ابن معين – رواية الدوري 4 /481) قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا… قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا ( المجروحين 2 /12)


 *✍✍✍அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள்.✍✍✍* 

 *நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் பாகம்: 1, பக்கம் : 64* 


📗📗📗இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறினார்கள்.📗📗📗


 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம் 1, பக். 153* 


 *✍✍✍இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை  நான்  செவியுற்றுள்ளேன்.✍✍✍* 


 *நூல்: தாரீக் இப்னு முயீன், பாகம்: 1, பக். 481* 


📒📒📒இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார் என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.📒📒📒


 *நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம் : 14* 


 *✍✍✍மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் &ஸப்பான் இப்னு ஃபாயித் என்பாரின் இந்த அறிவிப்பு மிக மிகப் பலவீனமானது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.* 
 *அம்ரு இப்னு ஆஸ் அறிவிப்பு✍✍✍* 


 *1134* – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ وَاقِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَنْ الِاحْتِبَاءِ يَوْمَ الْجُمُعَةِ، يَعْنِي: وَالْإِمَامُ يَخْطُبُ (سنن ابن ماجه)


📓📓📓ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📓📓📓


 *அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி)* 

 *நூல்: இப்னு மாஜா 1134* 


 *✍✍✍இதுவும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் இடம் பெற்றுள்ளன.* 
 *முதலாவது பலவீனம்: இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு வாகித் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.✍✍✍* 


عبد الله ابن واقد شيخ لبقية مجهول (تقريب التهذيب 2/ 328) ولا أدري هو أبو رجاء الهروي ، أو أبو قتادة الحراني. أو آخر ثالث (تهذيب الكمال 16/ 258) قال ابن عدي مظلم الحديث ) المغني في الضعفاء 1/ 362


📔📔📔பகிய்யத் இப்னு வலீத் என்பாரின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு வாகித் மஜ்ஹுல் யாரென்றே அறியப்படாதவர் ஆவார் என தக்ரீபுத் தஹ்தீப் நூலில் இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.📔📔📔


 *✍✍✍அப்துல்லாஹ் இப்னு வாகித் எனும் இவர் அபூ ரஜா அல்ஹர்வீ என்பவரா அல்லது அபூகதாதா அல்ஹர்ரானீ என்பவரா? அல்லது மூன்றாவதான வேறொருவரா என்பதை நான் அறிய மாட்டேன் என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.* *மேலும் இவர் ஹதீஸ்களில் இருட்டடிப்பு செய்பவர் என இப்னு அதீ அவர்கள் இவரை தமது முக்னீ ஃபில் லுஅஃபா எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள்✍✍✍* .


🌈🌈🌈எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.
இரண்டாவது பலவீனம் : இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள பகிய்யா இப்னு வலீத் என்பது தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவார்.🌈🌈🌈


بقية ابن الوليد ابن صائد… صدوق كثير التدليس عن الضعفاء (تقريب التهذيب1/ 126)


 *✍✍✍இவர் பலவீனமானவர்களிமிருந்து அதிகம் தத்லீஸ் செய்யக் கூடியவர் ஆவர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீபில்✍✍✍* 


 *(பாகம் 1, பக்கம் 126) குறிப்பிட்டுள்ளார்கள்.* 


⛱⛱⛱தத்லீஸ் என்றால் தம்முடைய ஆசிரியரிடமிருந்து அவர் செவியேற்காத செய்திகளையும் செவியேற்றதைப் போன்று பொருள் தரக்கூடிய வாரத்தைகளைப் பயன்படுத்தி அறிவிப்பவர் ஆவார். இத்தகைய அறிவிப்பாளர்கள் நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படும்.⛱⛱⛱


 *✍✍✍ஆனால் மேற்கண்ட அறிவிப்பில் பகிய்யா இப்னு வலீத் தமது ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்கான எந்த வார்த்தைகளும் வரவில்லை.* 
 *எனவே இந்த விமர்சனத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட செய்தி பலவீனமானது. இது ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியற்றதாகும் என்பது உறுதியாகிவிட்டது.* 
 *ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு✍✍✍* 


ثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا احمد بن الأزهر أبو الأزهر النيسابوري ثنا عبد الله بن ميمون القداح عن جعفر بن محمد عن أبيه عن جابر أن النبي صلى الله عليه وسلم نهى عن الحبوة يوم الجمعة والإمام يخطب (الكامل في ضعفاء الرجال 4/ 188)


📚📚📚ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு உட்காரும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.📚📚📚


 *அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)* 

 *நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால் பாகம் 4, பக்கம் 188* 


 *✍✍✍இந்தச் செய்தியும் பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மைமூன் அல்கத்தாஹ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பல அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்✍✍✍* .


قال البخاري ذاهب الحديث وقال أبو زرعة واهي الحديث وقال الترمذي منكر الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابع عليه. .. قلت: وقال النسائي ضعيف وقال أبو حاتم منكر الحديث وقال أبو حاتم يروي عن الاثبات الملزقات لا يجوز الاحتجاج به إذا انفرد وقال الحاكم روى عن عبيد الله بن عمر أحاديث موضوعة وقال أبو نعيم الاصبهاني روى المناكير. عليه. (تهذيب التهذيب 6/ 44)


🕋🕋🕋இவர் ஹதீஸ்களில் சறுகியவர் என்று இமாம் புகாரியும், இவர் ஹதீஸ்களில் மிகப் பலவீனமானவர் என அபூ சுர்ஆ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என திர்மிதி அவர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இவருடைய அறிவிப்புகளில் பெரும்பாலானவை மாற்று அறிவிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என நஸாயீ அவர்களும், இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கப்படவேண்டியவர் என அபூ ஹாதிம் அவர்களும் விமர்சித்துள்ளனர். இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக் கட்டி அறிவிப்பவர் ஆவார். இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாகக் கொள்வது கூடாது என அபூஹாதிம் விமர்சித்துள்ளார். இவர் உபைதுல்லாஹ் இப்னு உமர் என்பார் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என ஹாகிம் கூறியுள்ளார். இவர் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அபூ நுஐம் அல்இஸ்பஹானி விமர்சித்துள்ளார்.🕋🕋🕋


 *(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 44)* 


 *✍✍✍இந்த ஜாபிர் (ரலி) அவர்களை கூறியதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு அறவே தகுதியில்லாத இட்டுக்கப்பட்டது என்ற தகுதியைப் பெறக்கூடிய அளவில் உள்ள மிகமிகப் பலவீனமான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டது.* 
 *இமாமுடைய உரையைக் கேட்கும் போது கைகளால் முட்டுக் கால்களை கட்டிக் கொண்டு அமரக் கூடாது என்று வரும் அறிவிப்புகள் அனைத்தும் மிகப்பலவீனமானவையாக உள்ளன. எனவே இந்தப் பலவீனமான அறிவிப்புகளை வைத்து மார்க்கச் சட்டங்களை வகுப்பது கூடாது.✍✍✍* 


📕📕📕ஒருவர் உரையைக் கேட்கும் போது முட்டுக் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால் அதில் எவ்விதத் தவறுமில்லை.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளார்கள் என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது📕📕📕


 *6272* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي غَالِبٍ ، أَخْبَرَنَاإِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَرَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِنَاءِ الْكَعْبَةِ مُحْتَبِيًا بِيَدِهِ هَكَذَا.


 *✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை முழங்காலில் கட்டிக் கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.✍✍✍* 


 *நூல்: புகாரி 6272* 


🏵🏵🏵அதே நேரத்தில் மர்மஸ்தானம் தெரியும் வகையில் இவ்வாறு இருப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.🏵🏵🏵


 *584* حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ أَبِي أُسَامَةَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلَاتَيْنِ : نَهَى عَنِ الصَّلَاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ ، وَعَنْ الِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ الْمُنَابَذَةِ وَالْمُلَامَسَةِ .


 *✍✍✍மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும் நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.✍✍✍* 


 *அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : புகாரி 584* 


 *👉👉👉ஜும்மா நினைவுட்டள்👈👈👈* 


*ஏன் " ஜும்மா முபாரக் " எனக் கூறக்கூடாது?*


*வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.*


*பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.*


*உண்மையில்*
*வெள்ளிக்கிழமையில்* *‘ஜும்மா முபாரக்”*
*என்ற வாசகத்தை* *சொல்வதற்கு குர்ஆனிலோ,*
*ஆதாரப்பூர்வமான*
*ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும்*
*கிடையாது.*


*மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னா)  இருக்க வேண்டும்.*


*அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.*


*இதோ :- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :*


*இம்மார்க்கத்தில்  இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.(புகாரி # 2697)*


*என் கட்டளை இன்றி யார் செய்யும் எந்த செயலும் ( அமலும்) நிராகரிக்கப்படும்!( முஸ்லிம் # 3243 )*


*யார் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்ப நடக்கிறார்களோbஅவர்கள் அந்த மதத்தை சேர்ந்தவரே!( அஹ்மது # 4868)*


*A.செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!*
*B.நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!*
*C.காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!*
*D.புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!*
*E.ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*
*F.ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!*
*நஸயீ # 1560*
*ஜாபிர் ரலி.*


*ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு  செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!*


*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.*


*இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .*


*அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!*


*குர்ஆன் சொல்படி வாழ்வோம்!*
*கோமான்நபி வழி நடப்போம்!!*


 *🕋🌐🕋நபிவழியில் ஜும்மாவின் சட்டங்கள்🕋🌐🕋* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 64*


No comments:

Post a Comment