பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, December 20, 2019

ஜின்களும் - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖1⃣0⃣*

*☄ஜின்களின் இனப்பெருக்கம்*

*🏮🍂ஜின்களில் ஆண் பெண் ஜோடிகள் இருப்பதால் அவர்களுக்கிடையே இணைபெருக்கம் நடைபெறும் என்பதை அறியலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானிற்கு வழிதோன்றல்கள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதிலிருந்தும் இதை அறியாம்.*

_*🍃என்னையன்றி ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா❓ அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது.*_

*📖 அல்குர்ஆன் (18 : 50) 📖*

*🏮🍂இணைப்பெருக்கத்திற்குத் தேவையான காம உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பது போல் ஜின்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.*

_*🍃அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை.*_

*📖 அல்குர்ஆன் (55 : 56) 📖*

*🏮🍂தனது துணையை தீண்டும் பண்பு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் உண்டு என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.

*🏮🍂 மனிதன் விரும்புகின்ற விஷயங்களில் இல்லற இன்பம் முக்கியமானது. இதை மனிதன் மட்டுமல்லாமல் ஜின்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறார்கள் என்பதால் மனித ஜின் கூட்டத்தினரை அழைத்து இந்த பாக்கியம் சொர்க்கத்திலும் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான். அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.*

_*🍃 உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்❓ இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்❓  பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.*_

*📖அல்குர்ஆன் (55 : 70)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment