பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, December 15, 2019

ஜின்களும் - 6

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ஜின்களும் 🔥*
                        ⤵
           *🔥ஷைத்தான்களும்🔥*

            *✍🏻...... தொடர் ➖0⃣6⃣*

*☄ஜின்களின் வகைகள்☄*

*🏮🍂ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
              *அபூ சஃலபா (ரலி)*

*📚நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)*

*🏮🍂பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது.* இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

*🏮🍂பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும்.* பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄பாம்பு வடிவில் ஜின்கள்☄*

_*🍃நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்த போது அபூ லுபாபா (ரலி) அவர்கள் என்னைக் கூப்பிட்டு, “அதைக் கொல்லாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.*_

*🎙அறிவிப்பவர் :*
              *அப்துல்லாஹ்*
                    *பின் உமர் (ரலி)*

*📚 நூல் : புகாரி (3298) 📚*

*🏮🍂வீட்டில் வசிக்கும் பாம்புகளை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் ஜின்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து வீட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் பாம்புகள் ஜின்கள் இல்லை என்பதும் அவற்றை கொல்ல வேண்டும் என்பதும் தெளிவாகிறது.*

*🏮🍂வீடுகளில் தென்படுகின்ற பாம்புகள் அனைத்தும் ஜின்கள் தான் என்று விளங்கவிடக்கூடாது. பாம்புகளை வீட்டில் காணும் போது அவை வெளியேறுவதற்காக மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.* வெளியேறாவிட்டால் அவற்றை கொல்ல வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது. அதைப் பற்றி நாளைய தொடரில் காண்போம்.

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment