பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, December 2, 2020

நாவை* ⤵️ *பேனுவோம் - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 10 }*

*☄️மானம்,*
        *மரியாதையை*
              *கெடுக்கும் மற்ற*
                       *செயல்கள்*

*☄️குத்தி காட்டுவது,*
        *கேவலப்படுத்துவது*

*🏮🍂குண்டான ஒருவரைப் பார்த்து யானை என்று சொல்வது அல்லது பிந்து கோஸ் என்று சொல்வதும் ஒருவருடைய மானம் மரியாதை விஷயத்தில் விளை யாடுவதுதான். கண் ஒரு மாதிரியாக இருப்பவரைப் பார்த்து அரைக் கண்ணன், அல்லது மாலைக்கண்ணன், ஒன்றைக் கண்ணண், முண்டக்கண்னு என்று சொல் வதும், பல் நீண்டு இருப்பவரை தேங்காய் திருவி என்று சொல்வதும், பெரிய கை உள்ள ஒருவரைப் பார்த்து வீட்டில் உள்ள ஒட்டடைக்கம்பு என்று சொல்வதும், கால் ஊனமான ஒருவரைப் பார்த்து நொண்டி என்று சொல்வதும்,* வழுக்கைத் தலை உள்ள ஒருவரைப் பார்த்து இவர் வந்து நின்றால் மெரிக்குரி லைட் தேவையில்லையே என்று சொல்வதும் மிகவும் கேவலமான செயலாகும். *இப்படி கூறுபவர்கள் பின்வரும் வசனத்தை படித்து திருந்தட்டும்.*

*يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர் கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவ மான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.*_

*يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள் ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோ தரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா❓ அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*_

*📖(அல்குர்ஆன் 49:11,12)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment