பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, March 14, 2020

அல்குர்ஆன*வசனமும்📖* -6 ⤵️

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 06*

*☄️ஒரே வசனத்திற்க்கு*
         *ஒன்றுக்கும் மேற்பட்ட*
               *ஸபபுன்னுஸுல்*
                       *வருதல் [ 01 ]*

*🏮🍂ஒரே வசனத்துக்கு ஸபபுன்னுஸுலாக ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை குறிப்பிடும் வெவ்வேறு அறிவிப்புகள் வருவதுண்டு. கீழ்கண்ட வழிமுறைகளை கையாண்டால் முரண்பாடு வருவதற்கு வழியில்லை.*

*☄️1- ஒரு வசனம் இறங்கியதற்கு காரணமாக வெவ்வேறு செய்திகளை இருவேறு சஹாபிகள் அறிவித்து அவ்விரண்டு அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவையாகவும் இருந்தால், அவ்விரண்டில் எது தெளிவாக குறிப்பிடுகின்றதோ அதையே ஸபபுன்னுஸுல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.* தெளிவாக குறிப்பிடாத அறிவிப்பை அந்த ஸஹாபியின் விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

  *👇இதற்கு உதாரணமாக👇*

*🏮🍂சூரத்துல் பக்கராவின் 223-வது வசனத்துக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்வோம்.*

ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﺤﺎﻕ، ﺃﺧﺒﺮﻧﺎ اﻟﻨﻀﺮ ﺑﻦ ﺷﻤﻴﻞ، ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ ﻋﻮﻥ، *ﻋﻦ ﻧﺎﻓﻊ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ اﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ: " ﺇﺫا ﻗﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﻳﺘﻜﻠﻢ ﺣﺘﻰ ﻳﻔﺮﻍ ﻣﻨﻪ، ﻓﺄﺧﺬﺕ ﻋﻠﻴﻪ ﻳﻮﻣﺎ، ﻓﻘﺮﺃ ﺳﻮﺭﺓ اﻟﺒﻘﺮﺓ، ﺣﺘﻰ اﻧﺘﻬﻰ ﺇﻟﻰ ﻣﻜﺎﻥ، ﻗﺎﻝ: ﺗﺪﺭﻱ ﻓﻴﻢ ﺃﻧﺰﻟﺖ؟ ﻗﻠﺖ: ﻻ، ﻗﺎﻝ: ﺃﻧﺰﻟﺖ ﻓﻲ ﻛﺬا ﻭﻛﺬا، ﺛﻢ ﻣﻀﻰ  4527 - ﻭﻋﻦ ﻋﺒﺪ اﻟﺼﻤﺪ، ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﻲ ﺃﻳﻮﺏ، ﻋﻦ ﻧﺎﻓﻊ، ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ {ﻓﺄﺗﻮا ﺣﺮﺛﻜﻢ ﺃﻧﻰ ﺷﺌﺘﻢ} [اﻟﺒﻘﺮﺓ: 223]. ﻗﺎﻝ: ﻳﺄﺗﻴﻬﺎ ﻓﻲ، ﺭﻭاﻩ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ، ﻋﻦ ﻧﺎﻓﻊ، ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ*

_*🍃நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒருநாள் “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்” (சூரத்துல்பகரா 223) என்று தொடரும் ஆயத்தை ஓதினேன். அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், இந்த வசனம் எது விஷயத்தில் இறங்கியது என்று அறிவாயா❓ என்று கேட்டார்கள். அதற்கு தெரியாது என்றேன். பெண்களிடம் பின்பக்கமாக அமர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபடும் விஷயத்தில் இறங்கியது என்றார்கள்.*_

*📚 (புகாரி 4526, 4527) 📚*

*🏮🍂இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்று தெளிவாக இதுதான் இந்த வசனம் இறங்கக்காரணம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதற்க மாற்றமாக காரணத்தை தெளிவாக குறிப்பிடக்கூடிய ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்று வேறொரு செய்தியில் வந்துள்ளது.*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﺑﻦ اﻟﻤﻨﻜﺪﺭ، *ﺳﻤﻌﺖ ﺟﺎﺑﺮا ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: " ﻛﺎﻧﺖ اﻟﻴﻬﻮﺩ ﺗﻘﻮﻝ: ﺇﺫا ﺟﺎﻣﻌﻬﺎ ﻣﻦ ﻭﺭاﺋﻬﺎ ﺟﺎء اﻟﻮﻟﺪ ﺃﺣﻮﻝ، ﻓﻨﺰﻟﺖ: {ﻧﺴﺎﺅﻛﻢ ﺣﺮﺙ ﻟﻜﻢ ﻓﺄﺗﻮا ﺣﺮﺛﻜﻢ ﺃﻧﻰ ﺷﺌﺘﻢ} [اﻟﺒﻘﺮﺓ: 223] "*

_*🍃யூதர்கள், ஒரு ஆண் தன் மனைவியிடம் பின் பக்கமாக இருந்து தாம்பத்ய உறவு கொண்டால் பிள்ளை மாறு கண் உள்ள பிள்ளையாக பிறக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள் எனவேதான் “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்” என்ற சூரத்துல் பகராவின் 223-வது வசனம் இறங்கியது என்று ஜாபிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.*_

   *📚 நூல் : (புகாரி 4528) 📚*

*🏮🍂இதில் ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்றையே ஸபபுன்னுஸுலாக கொள்ளவேண்டும். ஏனென்றால் அதுதான் தெளிவான வாசகத்தைக் கொண்டுள்ளது. எனவே இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அவர்களின் விளக்கம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment