பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, June 27, 2020

தொழுகையில் சஃப் இடைவெளிவிட்டு தொழுவது சரியா?? தவறா??

தொழுகையில் சஃப் இடைவெளிவிட்டு தொழுவது சரியா?? தவறா?? ஆதாரங்கள் & அடிப்படை:

தோற்று நோய்: 
   உள்ளூரில் உள்ளவர்கள் அந்த ஊரை விட்டு வெளியே போகக்கூடாது. வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு வரக்கூடாது என்பது இஸ்லாத்தில் உள்ள சட்டம். 

  அந்த மாதிரி தொற்று நோய் உமர்(ரலி) காலத்தில் வந்தது. அந்த சமயத்தில் பள்ளிவாசலை மூடியோ , பள்ளிவாசலுக்கு வருபவர்களை தடுக்கவோ இல்லை. மேலும் இந்த மாதிரி சஃப்பில் இடைவெளிவிட்டு தொழுகை செய்யவும் இல்லை. எப்போதும் செய்தது போல் தான் செய்தார்கள். 

 முஸ்லீம் நாடுகளின் மிகப்பெரிய தவறு என்னவென்றால் இவர்களிடம் இந்த தொற்று நோய்யை உண்மையா என்பதை ஆய்வு செய்ய அனைத்து வசதிகளும் இருந்தும் ஆய்வு செய்யாமல் WHO சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக கடைப்பிடித்து வருகின்றன. எனவே பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் ஆய்வு செய்யாமல் மக்களை துன்புறுத்துவது தவறு. 
  
  நபிகளார்(ஸல்) இறைவா என் சமுதாயத்தவரின் விவகாரங்களில் ஒன்றுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்ட  ஒருவர் தேவையில்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கினால் நீ அவனுக்கு சிரமத்தை உருவாக்கு என்று தூவா செய்தார்கள். 
(முஸ்லீம் ஹதீஸ்)

இந்த ஆட்சியாளர்களுக்கு முட்டு கொடுக்கும் சில மார்க்க அறிஞர்களும் இந்த சாபத்திற்கு ஆளாவார்கள்.

நபிகளாரின(ஸல்) கட்டளைகள்:
   நபிகளாரின்(ஸல்) கட்டளைகளில் இரண்டு வகை உள்ளன.  அமுரு பின் மஹ்ருஃப் - நன்மையை செய்வது, ஏறுவது,   நைய்யனிர் முன் கஃர்- தீமையை தடுப்பது, விலகுவது.

முஸ்லீம் 1337 , புகாரி -7288
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 7288. 
அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்

  இதில் தீமையை தவிர்ப்பது, தடுப்பது 100% கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நன்மையை செய்வது, ஏறுவது முடிந்த அளவு செய்வது. 

 இந்த சஃப் சரியாக நெருங்கி நிற்பது நன்மை ஏவுவதில் வரும் என்று ஒரு ஆலீம் கூறினார். ஆனால் அதற்கான ஹதீஸ்களை பார்த்தால் தெரியும் எப்படி சொல்லப்பட்டது என்பது.. ! 

முஸ்லீம் 739

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள்.
தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 739. 
அத்தியாயம் : 4. தொழுகை

 இந்த வார்த்தை பிரேயோகம் தீமையை தடுப்பதில் வரும். 

சாஹிஹ் முஸ்லீம்  978
அல்லாஹ்வின் அடியார்கள் சஃப்களை சரி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அல்லாஹ் உங்கள் மீது பிரிவினையை உண்டாக்குவான். 

 இது தீமை தடுக்க கட்டளையிட்டது. இதை கண்டிப்பாக பின்பற்றுவதில் வரும். அல்லாஹ் நம் மீது பிரிவினை உண்டாக்க நினைத்தால் நாம் பண் மடங்காக பிரிவோம், பண் மடங்கு இழிவு வரும்., அல்லாஹ்வின் கோபம் வரும். 

 ஒரு நபித்தோழர் அபு மசூத் (ரலி)- இன்று  நீங்களோ வரிசையில் சரியாக நிற்காத காரணத்தால்   கடுமையான கருத்து வேறுபாடுடன் காணப்படுகிறீர்கள்" என்று சொன்னார்கள். 

சஃப்பின் முக்கியத்துவம்: 
As-Saf 61:4

اِنَّ اللّٰهَ یُحِبُّ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِهٖ صَفًّا كَاَنَّهُمۡ بُنۡیَانٌ مَّرۡصُوۡصٌ 

4. (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.

 இது போரில் நிற்கும் சஃப் மட்டுமில்லை தொழுகையில் நிற்கும் சஃப்பிற்கும் பொருந்தும் என்று பல சஹப்பாக்கள் கூறியுள்ளனர். 

முஸ்லீம் 745
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வளைந்த) அம்புக் குச்சிகளைச் சீராக்குவதைப் போன்று எங்கள் (தொழுகை) அணிகளைச் சீராக்குவார்கள். இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதியவரை (இவ்வாறு செய்துவந்தார்கள்). பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 745. 
அத்தியாயம் : 4. தொழுகை

இது சாதாரண விஷயமில்லை. சஃப்பின் முக்கியத்துவம் அதிகம். 

முஸ்லீம்  430, 119 , மிஸ்காத் 1091: 
நபிகளார்(ஸல்) தொழுகையில் சஹப்பாக்களை பார்த்து நீங்கள் ஏன் பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்..??  வானவர்களை போல் நில்லுங்கள் என்றார்கள். அதற்கு சஹப்பாக்கள் வானவர்கள் எப்படி நிற்பார்கள் என்று கேட்டனர். முதல் அணியை நிறைவு செய்வார்கள். வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள். மேலும் இரண்டாம் ரக்காத்தில் நான் பார்க்கவில்லை என்று வரிசையை கலைத்துவிடாதீர்கள் என்று கூறினார்கள். ஏனேனில் நான் எப்படி முன்னால் பார்க்கிறேனோ அதை போல் பின்னாலும் பார்க்கிறேன் என்று சொன்னார்கள்.

இப்படி ஒரு நேரத்தில் கூட தொழுகையில் வரிசை சிதைந்திருப்பதை அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு சஃப் என்பது மிகவும் முக்கியம். 

இமாமின் கடமை: 

 மிஷ்காத்-  1097  அபு தாவூத் -665 :

 நோஃமன் பின் பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள், தொழுகையில் நாங்கள் நிற்கும் போது நபி(ஸல்) சஃப்களை சரி செய்வார்கள். எப்போது நாங்கள் சரியாக நிற்கிறோமே அதன் பிறகு தான் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் சொல்வார்கள். 

இது தான் இமாமிற்கான விதிமுறை. சஃப் சரியில்லாமல் தொழுகை தொடங்கவே கூடாது என்பது மஸாயீல்.. 
 
   இந்த சமூக இடைவெளி விட்டு நிற்கும் போது இமாம் தொழுகை ஆரம்பிக்க அனுமதியில்லை. இதற்கு மறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும். அது நபிகளார்(ஸல்) தடுத்ததை எப்படி செய்யலாம்..?? என்று அல்லாஹ் கேட்பான். 
  
   எதுவரை இந்த சமூக இடைவெளி இல்லாமல் நபிவழியில் தொழ அனுமதி கிடைக்கிறதோ அதுவரை பள்ளிவாசலை திறக்காமல் வீட்டிலேயே ஜமாஅத்தாக தொழுகலாம். 

 தொழுகை ஏற்று கொள்ளப்படாது: 
  அபு தாவூத் 666 -
   
 நபி(ஸல்) உங்கள் சஃப்களை நிலைநாட்டுங்கள். தோள்கள் சரிசமமாகவும் , இடைவெளி இல்லாமலும் , உங்கள் சகோதரருக்கு தோள்களை மென்மையாக ஆக்கி கொள்ளுங்கள். சைத்தானுக்கு இடைவெளி விடாதீர்கள். யார் சஃப்பை இணைத்துக்கொள்வாரோ அல்லாஹ் அவரையும் அரவணைத்து கொள்வான். யார் சஃப்பை இணைக்காமல் விட்டு விடுகிறாரோ அல்லாஹ்வும் அவரை விட்டுவடுவார் என்று கூறினார்கள். 

 முஸ்லீம் 741, 743

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 741. 
அத்தியாயம் : 4. தொழுகை

முஸ்னத் அஹ்மது- 18170, அபு தாவூத்- 682, தீர்மிதி- 230, மிஷ்காத்-1105: 

   வாபிஸா பின் வாஹ்ப்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) சஃப்க்கு விலகி (ஜமாத்தில்) ஒரு மனிதர் தொழுவதை பார்த்து, அவரை மீண்டும் தொழுமாறு கட்டளையிட்டார்கள். 

எனவே சஃப் சரியில்லாமல் தொழுதால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது, அதை மீண்டும் தொழ வேண்டும் என்று நபிகளார்(ஸல்) கட்டளையிட்டார்கள். 

   சமூக இடைவெளியில் தொழுதால் நிச்சயமாக ஏற்று கொள்ளப்படாது. அதற்கு ஒரு போதும் அனுமதியில்லை. 

சைத்தானுடன் தொழுகை: 
  மேலும் அந்த செயலை சைத்தானுடன் சேர்ந்து கூறியுள்ளார். 

 புகாரி-583, 3272,73, முஸ்லீம்-288, 827:
மிஷ்காத்- 1042: 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். 
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 3272. 
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: 
மேலும், சூரியன் உதிக்கிற நேரத்திலும் அது மறைகிற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கிடையே உதிக்கிறது. 
ஸஹீஹ் புகாரி : 3273. 
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

 நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, நானும் மதீனாவுக்கு வந்து அவருடைய சேவைக்கு வந்து தொழுகை நேரங்களைப் பற்றி என்னிடம் சொல்லும்படி கேட்டேன் என்று அம்ர் இப்னு அஸ்பா (ஸல்) அவர்கள் விளக்கினர். அவர் கூறினார்: “ஃபஜ்ர் தொழுகையைச் செய்யுங்கள்  சூரியன் நன்றாக உதயமாகும் வரை எந்த தொழுகையும் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது உதிக்கும் போது, அது சைத்தானின் தலையின் இரு பக்கங்களுக்கிடையில் எழுகிறது, பின்னர் காஃபிர்கள் அதற்கு முன் ஸஜ்தா செய்கிறார்கள்.  தொழும் போது  மலக்குகள் இருப்பதால், (தலைசிறந்த) தொழுகையை செய்யுங்கள், ஈட்டியின் நிழல் அவரது தலையில் விழுந்தாலும், பின்னர் தொழுகை செய்யாதீர்கள், ஏனென்றால் நரகம் எரிகிறது, எனவே நிழல் தோன்றத் தொடங்கும் போது, தொழுகை செய்யுங்கள்  மலக்குகள் இருக்கும் நேரத்தில், நீங்கள் அஸ்ர் தொழுகையைச் செய்தாலும், சூரியன் மறையும் வரை தொழுகை செய்யாதீர்கள்.  ஏனென்றால் அது சாத்தானின் தலையின் இரு பக்கங்களுக்கிடையில் அமைகிறது, பின்னர் காஃபிர்கள் அவனுக்கு முன் ஸஜ்தா செய்கிறார்கள்.
   நான் சொன்னேன்: அல்லாஹ்வின் நபி!  அவர் சொன்னார்: அவர் சொன்னார்: “உங்களில் ஒருவர் தனது வறட்சியின் தண்ணீருக்கு அருகில் வந்து அதை துவைக்கும்போது, மூக்கில் தண்ணீரை வைத்து அதை அசைக்கும்போது, அவரது முகம், வாய் மற்றும் மூக்கு.  பின்னர் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படி முகத்தை கழுவுகையில், பின்னர் தண்ணீரின் மூலம் அவர் முகம் மற்றும் தாடியின் பக்கங்களிலும் உள்ள பாவங்களிலிருந்து விடுபடுகிறார், பின்னர் அவர் முழங்கைகள் வரை கைகளை கழுவுகிறார், பின்னர் தண்ணீருடன்  அவரது விரல்களின் நுனி வரை பாவங்கள் கழுவப்பட்டு, பின்னர் அவர் தலையைத் துடைக்கிறார், பின்னர் தண்ணீரில் அவரது தலைமுடியின் பக்கங்களில் உள்ள பாவங்கள் கழுவப்படுகின்றன.  பின்னர் அவர் கணுக்கால் உட்பட கால்களைக் கழுவுகிறார், பின்னர் கால்விரல்கள் உட்பட கால்களின் பாவங்கள் தண்ணீரில் கழுவப்படுகின்றன.அப்போது, அவர் எழுந்து தொழுது, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவர் தகுதியுள்ளவருக்கு மகிமைப்படுத்துகிறார்.  அவர் தனது இருதயத்தை தூய்மையான அல்லாஹ்வின் பக்கம் திருப்பினால், தொழுகைகளுக்குப் பிறகு அவர் தனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாள் போன்ற பாவங்களிலிருந்து தூய்மையாவார்.
 கூடுதல் தகவல்கள்
 இஸ்லாமிய சேயிங்ஸ்.காம் / ஹடீஸ்- விவரங்கள் / மிஷ்காட் / 1042

எனவே இந்த நேரத்தில் தொழுதால் அல்லாஹ்வை தொழுததாக ஆகாது, காஃபிர்களுடன் சேர்ந்து சைத்தானுக்கு தொழுத மாறி ஆகிவிடும். இதை போல் தான் சைத்தானுக்கு மத்தியில் தொழுதால் நாமும் அவனுடைய வரிசையில் வந்துவிடுவோம். எனவே இந்த இடைவெளிவிட்டு தொழுவது திட்டவட்டமான ஹராம்.. 

Al-Baqarah 2:208

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ كَآفَّةً ۪ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَكُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

அபுதாவூத் -667,  மிஷ்காத்- 1093:

 ஹதீஸ்

 مْسْلِمُ بُنإِ,,, عَنْنَسِ بْنِ مَالِكٍ

 صُفُوفَكُمْ وَقَارِبُوا وَحَاذُوا بِالأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي

 விவரிக்கப்பட்ட அனஸ் இப்னு மாலிக்:

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வரிசைகளில் ஒன்றாக நின்று, ஒருவருக்கொருவர் அருகில் கொண்டு வந்து, கழுத்துக்கு கழுத்தில் நிற்கவும், ஏனென்றால் நிச்சயமாக, சைத்தான் வரிசையில் சஃப்களின் இடையில்(திறப்புகளின் வழியாக) வருவதைப் பார்க்கிறேன்  சிறிய கருப்பு ஆடுகள் போல். 

 சாஹிஹ் (அல்-அல்பானி)

 சுனன் அபி தாவூத் 667
 புத்தகத்தில்: புத்தகம் 2, ஹதீஸ் 277
 ஆங்கில மொழிபெயர்ப்பு: புத்தகம் 2, ஹதீஸ் 667 அபு தாவூத்

  இப்படி தொழுவது ஹராம், சைத்தானுடன் தொடர்புடையது. முன்னர் மழைக்காலங்களில் வீட்டில் தொழுகலாம் என்று ஆதாரம் காட்டி வீட்டில் தொழுகை செய்வதை ஹலால் என்று சொன்னார்கள். இப்போது ஜமாத்துக்கு வராமல் வீட்டில் தொழும் வீடுகளை நபிகளார்(ஸல்) எரிக்க கூறியதாக ஆதாரம் காட்டி இப்படி ஹராமாக தொழ சொல்கிறார்கள். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள்..??

  இந்த மாதிரி தொழுகை செய்ய ஆரம்பித்தால் இது ஆறு மாதங்கள் வரை தொடரும். பிறகு பழையப்படி சஃப் ஓட்டி நிற்க யாரும் முன்வரமாட்டார்கள். அதை பற்றி கவலைப்படமாட்டார்கள். 
 இந்த மாதிரி முதலில் இஸ்லாமிய நாடுகள் சமூக இடைவெளி தொழுகையை தானாக ஆரம்பித்து விட்டதால், முஸ்லீமல்லாத நாடுகளில் வாழும் நாம் இந்த அரசிடம் அது தவறு என்று சமூக இடைவெளி இல்லாமல் தொழுகை செய்ய இனி அனுமதி வாங்க முடியாது. இதற்கான குற்றம் அவர்களை தான் சேரும். 

 மற்ற விசயங்களில் முன்னோர்களை பயன்படுத்துபவர்கள், இப்போது மார்க்கத்தின் அடிப்படைக்கு ஏன் முன்னோர்களை பின்பற்றவில்லை??

இப்படி தொழுகை செய்ய எந்த நிர்ப்பந்தமும் நமக்கு இல்லை. வீட்டிலேயே தொழுகை நடத்த கூட ஒரு வகையில் அனுமதி எடுக்கலாம். இதுவே பள்ளிவாசலை மூடவோ , பள்ளிவாசலுக்கு வருபவர்களை தடுக்கவோ , அடிக்கவோ அனுமதியில்லை. முஸ்லீமல்லாத நாடுகளில் மட்டுமில்லாமல் , முஸ்லீம் நாடுகளிலும் அடிக்கப்பட்டு , கைதுசெய்யப்பட்டார்கள். இதற்கு அல்லாஹ்விடம் பதில் தர வேண்டும். அதே போல் இடைவெளி விட்டு தொழுகை செய்யவும் எந்த விதத்திலும் அனுமதியில்லை. 

இஸ்லாத்தின் அடிப்படை உடையும்

 இதில் இன்னொரு விஷயம் உள்ளது. ஜூம்மா நாளில் எப்படி செய்வார்கள்..?? என்ன செய்வார்கள்?? 
 அப்போது பாகுபாடு உருவாகும். முக்கிய பிரமுகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஏழைகளும், கூலி தொழிலாளி போன்றவர்கள் வெளியே தொழும் நிலை உருவாகும்.  சிலருக்கு ஜமாத் கிடைக்கும், சிலருக்கு கிடைக்காது. பாரபட்சம் காட்டப்படும். அது தான் பிரிவினைகள் பெரிய அளவில் உருவாகும் என்றது. சாதி பிரச்சினை போல் ஆகிவிடும். பிறகு இஸ்லாத்தை பலர் வெறுக்க நேரிடும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாத்தின் கயிறுகள் ஒவ்வொன்றாகத் துண்டிக்கப்படும். ஒரு கயிறு துண்டிக்கப்படும் போதெல்லாம் மக்கள் அதற்கு அடுத்ததைப் பற்றிப் பிடிப்பார்கள். அவைகளில் முதலாவதாகத் துண்டிக்கப்படுவது ஆட்சி அதிகாரம் ஆகும். அவைகளில் இறுதியானது தொழுகையாகும்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : அஹ்மத் 22214

இஸ்லாத்திற்கும் ஆட்சி, அரசியலுக்கு சம்பந்தமில்லை என்று பல ஆலீம்கள் கூறினார்கள். அது அல்லாஹ்வால் வழங்கப்படும் பிச்சை. அது நமக்கு கடமையில்லை என்று கூறினார்கள். ஆனால் இந்த ஹதீஸில் இஸ்லாத்தின் முதல் கயிறே ஆட்சி- கிலாஃபத் என்று நபிகளார்(ஸல்) கூறினார்கள். முதல் கயிறு என்றால் எத்தனை முக்கியம் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். அது எப்பவோ போய்விட்டது. ஒரு பெயருக்கு என்று இருந்த உஸ்மானிய ஆட்சி போய் 100 வருடங்கள் ஆகின்றன. குடும்பவியல் சட்டங்கள் போய்விட்டன, பொருளாதார சட்டங்கள் போய்விட்டன. அரசியல் சட்டங்கள் போய்விட்டன. குற்றவியல் சட்டங்கள் சிறிது இருந்தன, 2 மாதங்களுக்கு முன் அதையும் நீக்கிவிட்டார்கள். கசையடி நீக்கிவிட்டார்கள். தொழுகை மட்டும் தான் இருந்தது. இப்போது சமூக இடைவெளிவிட்டு தொழுதால் அந்த தொழுகை ஏற்கப்படாது. அதுவும் போய்விடும். முழு அம்மணமாக ஆகிவிட்டோம். 

Al-A'raf 7:27

یٰبَنِیۡۤ اٰدَمَ لَا یَفۡتِنَنَّكُمُ الشَّیۡطٰنُ كَمَاۤ اَخۡرَجَ اَبَوَیۡكُمۡ مِّنَ الۡجَنَّةِ یَنۡزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوۡاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمۡ هُوَ وَقَبِیۡلُهٗ مِنۡ حَیۡثُ لَا تَرَوۡنَهُمۡ ؕ اِنَّا جَعَلۡنَا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ 

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.

இப்படிதான் ஆதம்(அலை)  அவர்களையும் ஏமாற்றியதாக அல்லாஹ் கூறுகிறான். 

Al-An'am 6:43

فَلَوۡلَاۤ اِذۡ جَآءَهُمۡ بَاۡسُنَا تَضَرَّعُوۡا وَلٰكِنۡ قَسَتۡ قُلُوۡبُهُمۡ وَزَیَّنَ لَهُمُ الشَّیۡطٰنُ مَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ 

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

இனி இந்த தொழுகை சைத்தானுக்கு  தொழுவதாக ஆகிவிடும். இதில் அல்லாஹ்வின் ரஹ்மத் இருக்காது. அதனால் ஒற்றுமைக்கு பதிலாக பிரிவினை உண்டாக்கும். அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும். ஏற்கப்படாது. இனி இஸ்லாத்தின் எந்த கயிறும் இல்லை. இஸ்லாத்தின் அடிப்படையே இல்லை. இழப்பதற்கு ஒன்றுமில்லை. இனி அல்லாஹ்வின் தண்டனை வரும். 
 இதில் பல பேரின் இலாபம் உள்ளது. பள்ளிவாசல் திறந்தால் வருமானம் வரும் என்றும் செய்கிறார்கள். எனவே இஸ்லாத்தின் கடைசி கயிறு தொழுகையையாவது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment