Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 2, 2019

அமல்களை*அதிகரிப்போம - 19

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥அமல்களை*
                  *அதிகரிப்போம் [ 02 ]🔥*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖1⃣9⃣*

*☄உபரியான*
                *வணக்கங்கள்*
                            *புரிவோம் [ 04 ]*

*☄சுன்னதான*
              *தொழுகையின்*
                           *சிறப்புகள் { 03 }*

         *🔥 நரகத்திலிருந்து*
                         *பாதுகாப்பு 🔥*

حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ البَغْدَادِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ الشَّامِيُّ ، قَالَ : حَدَّثَنَا الهَيْثَمُ بْنُ حُمَيْدٍ قَالَ : أَخْبَرَنِي العَلاَءُ بْنُ الحَارِثِ ، عَنِ القَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ ، قَالَ : سَمِعْتُ أُخْتِي *أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّار*

_*🍃யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துகளும் பின்பு நான்கு ரக்அத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.*_

*🎙அறி : உம்மு ஹபீபா (ரலி),*

       *📚 நூல் : திர்மிதி 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄அல்லாஹ்வின் அருள் உண்டு*

1273 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْقُرَشِىُّ حَدَّثَنِى جَدِّى أَبُو الْمُثَنَّى *عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا*

_*🍃அஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறி : இப்னு உமர் (ரலி),*

*📚நூல் : திர்மிதீ,*
                       *அபூதாவூத்,*
                             *இப்னு மாஜா*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மக்ரிபுக்கு முன்*
            *தொழுகிறோமா❓*

1183- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، عَنِ الْحُسَيْنِ ، *عَنِ ابْنِ بُرَيْدَةَ ، قَالَ : حَدَّثَنِي عَبْدُ اللهِ الْمُزَنِيُّ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ صَلُّوا قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ- قَالَ فِي الثَّالِثَةِ – لِمَنْ شَاءَ كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً*

_*🍃மக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.*_

*🎙அறி : அப்துல்லாஹ்*
                     *அல் முஸ்னி (ரலி),*

         *📚 நூல் : புகாரி 📚*

1184- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ، قَالَ : حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ قَالَ : سَمِعْتُ مَرْثَدَ بْنَ عَبْدِ اللهِ الْيَزَنِيَّ *قَالَ أَتَيْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ فَقُلْتُ أَلاَ أُعْجِبُكَ مِنْ أَبِي تَمِيمٍ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ فَقَالَ عُقْبَةُ إِنَّا كُنَّا نَفْعَلُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قُلْتُ فَمَا يَمْنَعُكَ الآنَ قَالَ الشُّغْلُ*

_*🍃நான் உக்பா பின் ஆமிர் (ரலி) யிடம் சென்று, “அபூதமீம் மக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத் தொழுகிறார்களே! இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா❓” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்” என்று விடையளித்தார்கள். “இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்❓” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அலுவல்களே காரணம் என்றார்கள்.*_

*🎙அறி : மர்ஸத் பின்*
                       *அப்துல்லாஹ்,*

          *📚 நூல் : புகாரி 📚*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்றாலும் விரும்பியவர்கள் தொழுமாறு கட்டளை இட்டுள்ளார்கள்.* ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்ரிபுக்கு முன்னால் சுன்னத் தொழுவது நடைமுறையில் இல்லை.

*🏮🍂குறிப்பாக ஹனபி மத்ஹபில் மக்ரிப் பாங்கு சொல்லப் பட்டவுடனேயே இகாமத்தும் சொல்லி தொழுகையைத் துவக்கி விடுகின்றனர். இதனால் யாரும் முன் சுன்னத் தொழ முடியாத நிலை ஏற்படுகின்றது. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமானதாகும். மற்ற தொழுகைகளைப் போல் மக்ரிபுடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் முன் சுன்னத் தொழுவதற்கான இடைவெளியை ஏற்படுத்துவது அவசியமாகும்.*

627- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ قَالَ، حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ ، *عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ : لِمَنْ شَاءَ*

_*🍃ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறி : அப்துல்லாஹ்*
                 *பின் முகப்பல் (ரலி),*

*📚நூல் : புகாரி, முஸ்லிம்📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼..தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment