பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 2, 2019

அமல்களை*அதிகரிப்போம - 14

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 01 ]🔥*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
             *தொழுகையும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖1⃣4⃣*

*☄தொழுவதால்*
              *கிடைக்கும்*
                      *நன்மைகள் [ 01 ]*

*🏮🍂இஸ்லாம் ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் போது அதை நிறைவேற்றாமல் விட்டால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடும். அதே நேரத்தில் அதை முறையாக நிறைவேற்றினால் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடும்.* தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். அதை முறையாக நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுத்தம் ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது நன்மை) தராசை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் (ஆகியவற்றைக் கூறுவதால் கிடைக்கும் நன்மை) வானங்கள் மற்றும் பூமிக்கு இடையில் இருப்பவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும்.*_

*🎙அறிவிப்பவர்:*
            *அபூமாலிக்*
                   *அல்அஷ்அரீ (ரலி)*

       *📚 நூல்: முஸ்லிம் 328 📚*

*🏮🍂இந்த ஹதீஸில் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் ஒளி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மறுமை நாளில் இருள் சூழ்ந்திருக்கும் போது நாம் முறையாக இந்த உலகத்தில் தொழுகையைக் கடைப்பிடித்திருந்தால் அந்தத் தொழுகை நமக்கு வெளிச்சமாக வந்து உதவும்.* தொழுகையைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது அது மானக்கேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து தடுக்கிறது என்று கூறுகிறான். *தொழுகை தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நல்ல வழியில் செலுத்தும் என்ற கருத்தும் ஒளி என்று சொல்லப் பட்டதிலிருந்து விளங்குகின்றது.*

_*🍃"அல்லாஹ் தனக்குக் கட்டளையிட்டவாறு ஒருவர் உளூவை பூரணமாகச் செய்தால் கடமையான தொழுகைகளுக்கு இடையில் (அவர் செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாக (அந்தக்) கடமையான தொழுகைகள் ஆகி விடுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
             *உஸ்மான் பின்*
                     *அஃப்பான் (ரலி)*

  *📚 நூல்: முஸ்லிம் 339 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment