பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, September 24, 2020

இஸ்லாத்தை அறிந்து - 89

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 89 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚* 

 
 *29. ☪️☪️☪️நோன்பு🕋🕋🕋 திறக்கும்🟣🟣 துஆ🤲🤲🤲* 


 *30. 🧕🧕🧕பெண்கள்🧕🧕🧕 ஜியாரத்☪️☪️ செய்யலாமா❓☪️☪️☪️* 



 *29. ☪️நோன்பு திறக்கும் துஆ🤲* 


 *✍️✍️✍️தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு என்று ஆரம்பிக்கும் இந்த துஆவை ஓதியதாக✍️✍️✍️* 


حدثنا عبد الله بن محمد بن يختی آبو محمد حدثنا علي بن الحسن أخبرني اليث بن ابن عمر يقبض على لحيته فقط واقد حدثنا مروان يغني ابن سالم المقفع قال رأي ما زاد على الكف وقال كان رشول الله صلى الله عليه وسلم إذا أفطر قال ذهب الظما وابتلت العروق وثبت الأجر إن شاء الله


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூதாவூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது* .
 *இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம், எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம், இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம் மற்றும் அவரின் அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்ளை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.* 
 *ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள். மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம்பெற்றுள்ளார் என்று ஹாகிம் தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை, புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️புகாரியிடத்திலும் அவரும் மனிதர்தான் என்ற அடிப்படையில் தவறுகள் நிகழும் என்பது வேறு விஷயம்.* 
 *ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம்பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம். மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள். ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை .)* 
 *ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம்பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல் அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.* 
 *இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்று தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால்  யாரென்றே தெரியாதவர்களையும்  இப்னு ஹிப்பான் நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*
 

 *✍️✍️✍️ஹாகிம் அவர்களின் ” இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேற எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின்நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.* 
 *எனவே யாரேன்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.* 
 *இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்குகென்று தனியாக எந்த துஆவும் இல்லை  என்பது உறுதியாகின்றது.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ்கூற வேண்டும். என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லி விட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும், பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.* 
 *நமது கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *30. 🧕பெண்கள் ஜியாரத் செய்யலாமா❓☪️* 


 *🧕🧕🧕பெண்கள் கப்ர் ஜியாரத் செய்வது கூடாது என்பதுதான் முதலில் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடாக இருந்தது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக முன்வைக்கப்பட்டது🧕🧕🧕* 


۲۹۹ حدثنا قتيبة حدثنا عبد الوارث بن سعيد عن محمد بن جحادة عن أبي صالح عن ابن عباس قال لعن رشول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والشرج قال وفي الباب عن أبي هريرة وعائشة قال أبو عيسى حديث ابن عباس حديث حسن أبو صالح هذا هو مولى أم هانئ بنت أبي طالب واشمه بادا وقال بادام أيضا رواه الترمدي


 *✍️✍️✍️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : கப்ருகளை ஜியாரத் செய்யக் கூடிய பெண்களையும், கப்ருகளின் மீது வணக்கத் தலங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களையும், அதன் மீது விளக்குகளைத் தொங்கவிடுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சபித்தார்கள்✍️✍️✍️.* 


 *(நூல் : திர்மிதி 294) இதே செய்தி நஸாயீ (2016), அபூதாவூத் (2817), இப்னுமாஜா (1564), அஹ்மத் (1926, 2472, 2829, 2952) ஆகிய நூற்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ளது.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூசாலிஹ் என்பார் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார். எனவே இந்த ஹதீஸ் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல. பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்கு தடையில்லை என்பதே சரியானதாகும்.* 
 *மரண பயத்தையும் மறுமை சிந்தனையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️நான் “அல்லாஹ்வின் தூதரே! அடக்கத் தலங்களில் இருப்பவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அஸ்ஸலாமு அலா அஹல்த் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹல் முஸ்தக்திமீன் மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லா{ஹ பிக்கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.* 
 *(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)✍️✍️✍️* 


 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1774)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்’ என்று கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1777)* 


 *✍️✍️✍️அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுக்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். )✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : புரைதா (ரலி),* 

 *நூல் : திர்மிதி (974)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்கு செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணைவைப்பு அறங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


*📚📚📚 தலைப்பு  7 மாற்றப்பட்ட நிலைப்பாடு 📚📚📚* 


 *1. 🕋🕋🕋மார்க்க🕋🕋 ஆய்வுகளும்☪️☪️ மாற்றப்பட்ட☪️☪️ நிலைப்பாடுகள்☪️☪️ முன்னுரை🕋🕋🕋* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 90* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment