பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, April 24, 2020

அல்குர்ஆன் வசனமும் - 46

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : { 46 }*
                           
*☄️கொள்கை*
         *விளக்கங்கள் பற்றி*
            *இறங்கிய வசனங்கள்{ 08 }*

*☄️பெற்றோருக்குக்*
             *கட்டுப்படுவதன் எல்லை*

*وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ*

_*🍃மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.*_

_*உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.*_

*📖அல்குர்ஆன் 31:14,15📖*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ، ﻭﺯﻫﻴﺮ ﺑﻦ ﺣﺮﺏ، ﻗﺎﻻ: ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻣﻮﺳﻰ، ﺣﺪﺛﻨﺎ ﺯﻫﻴﺮ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻤﺎﻙ ﺑﻦ ﺣﺮﺏ، *ﺣﺪﺛﻨﻲ ﻣﺼﻌﺐ ﺑﻦ ﺳﻌﺪ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﺃﻧﻪ ﻧﺰﻟﺖ ﻓﻴﻪ ﺁﻳﺎﺕ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ ﻗﺎﻝ: ﺣﻠﻔﺖ ﺃﻡ ﺳﻌﺪ ﺃﻥ ﻻ ﺗﻜﻠﻤﻪ ﺃﺑﺪا ﺣﺘﻰ ﻳﻜﻔﺮ ﺑﺪﻳﻨﻪ، ﻭﻻ ﺗﺄﻛﻞ ﻭﻻ ﺗﺸﺮﺏ، ﻗﺎﻟﺖ: ﺯﻋﻤﺖ ﺃﻥ اﻟﻠﻪ ﻭﺻﺎﻙ ﺑﻮاﻟﺪﻳﻚ، ﻭﺃﻧﺎ ﺃﻣﻚ، ﻭﺃﻧﺎ ﺁﻣﺮﻙ ﺑﻬﺬا. ﻗﺎﻝ: ﻣﻜﺜﺖ ﺛﻼﺛﺎ ﺣﺘﻰ ﻏﺸﻲ ﻋﻠﻴﻬﺎ ﻣﻦ اﻟﺠﻬﺪ، ﻓﻘﺎﻡ اﺑﻦ ﻟﻬﺎ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﻋﻤﺎﺭﺓ، ﻓﺴﻘﺎﻫﺎ، ﻓﺠﻌﻠﺖ ﺗﺪﻋﻮ ﻋﻠﻰ ﺳﻌﺪ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ ﻫﺬﻩ اﻵﻳﺔ: {ﻭﻭﺻﻴﻨﺎ اﻹﻧﺴﺎﻥ ﺑﻮاﻟﺪﻳﻪ ﺣﺴﻨﺎ ﻭﺇﻥ ﺟﺎﻫﺪاﻙ ﻋﻠﻰ ﺃﻥ ﺗﺸﺮﻙ ﺑﻲ} ﻭﻓﻴﻬﺎ {ﻭﺻﺎﺣﺒﻬﻤﺎ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ ﻣﻌﺮﻭﻓﺎ} [ﻟﻘﻤﺎﻥ: 15*

_சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாவது:_

_*என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)*_

_*🍃நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ண மாட்டேன்; பருக மாட்டேன் என்று (என் தாயார்) உம்மு சஅத் சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் “உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)” என்று கூறினார்.*_

_*இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், “மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தொடங்கி, “உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்” (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.*_

    *📚 நூல்: முஸ்லிம் (4789) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment