பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, December 8, 2016

கவிதைகளை படித்தால்

மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத, தவறில்லாத கவிதைகளை படித்தால் தவறில்லை என்ற அளவிற்குத்தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது. ஆனால் மவ்­லித் என்ற அனாச்சாரத்தை உருவாக்கி அதை மார்க்கமாக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களைப் பற்றி கூறப்பட்ட வசனங்களையும், நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும், இணைவைப்பில்லாமல் சில ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மௌ­தை ஓதலாம் என பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில் மவ்­லித்) நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர்.

ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவரவர் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனோ உருவாக்கியவற்றை அவர்கள் எழுதிவைத்துப் படிக்கவில்லை.

ஸஹாபாக்கள் போர்க்களங்களிலும், யதார்த்தமான நிலையில் இருக்கும் போது மட்டுமே சில கவிதைகளைக் கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாகச் செய்யவில்லை

ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, தோரணங்கள் கட்டி வழிபாடாகச் செய்கின்றனர்.

ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதிலுள்ள தவறுகளைத் திருத்தியுள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபியவர்கள் திருத்தவில்லை.

திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அது போன்று ஸஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும் இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.

விபச்சாரியோடு செய்வதைத்தானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப் படுத்த முடியாதோ அது போன்றே ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளைக் காட்டி இவர்கள் ஓதும் மௌ­லீதை நியாயப் படுத்த முடியாது.

No comments:

Post a Comment